ஆன்மிகம்
அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன் காயத்ரி மந்திரம்

Published On 2020-01-24 06:39 GMT   |   Update On 2020-01-24 06:39 GMT
‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின் அம்சம்’ என்று கூறுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
இவர் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவாக விளங்கிய துரோணருக்கும், கிருபரின் தங்கை கிருபிக்கும் மகனாக பிறந்தவர். இறையம்சத்துடன் பிறந்த அஸ்வத்தாமன், பிறக்கும் போது உச்சை சிரவஸ் என்ற தேவலோகத்தில் உள்ள குதிரையை போல சத்தம் எழுப்பியதால் ‘அஸ்வத்தாமன்’ என்ற பெயர் உண்டானது.

இவர் பிறக்கும்போது நெற்றியில் மணியுடன் பிறந்தவர். குருச்சேத்திர யுத்தத்தில் கவுரவர்கள் தரப்பில் போரிட்டு உயிருடன் இருந்தவர்களில் இவரும் ஒருவர். பாரதப் போர் முடிவில் உப பாண்டவர்களைக் கொன்று கிருஷ்ணரிடம் சாபம் பெற்றார். ‘எந்த ஒரு மனிதர் மந்திர பலத்தில் சிறந்தவராக திகழ்கிறாரோ, அவர் அஸ்வத்தாமனின் அம்சம்’ என்று கூறுவார்கள்.

இவருக்குண்டான காயத்ரி மந்திரம்..

“ஓம் ஸ்திராபுஷ்மன்தாய வித்மஹே
த்ரோண புத்ராய தீமஹி
தந்நோ அஸ்வத்தாம ப்ரசோதயாத்”

Tags:    

Similar News