ஆன்மிகம்
காயத்ரி மந்திரம்

கிருபாச்சாரியார் காயத்ரி மந்திரம்

Published On 2020-01-20 04:57 GMT   |   Update On 2020-01-20 04:57 GMT
எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள். இவருக்கான காயத்ரி மந்திரம்..
கவுதம முனிவரின் கொள்ளுப் பேரன். சரத்வானருக்கும் - ஜனபதிக்கும் மகனாகப் பிறந்தவர். அஸ்தினாபுரம் அரசர் சந்தனுவிற்கு வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தவர். துரோணாச்சாரியாரின் மனைவியும், அஸ்வத்தாமனின் தாயுமான கிருபி, இவரது தங்கை ஆவார். குரு வம்சத்தினருக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும், ராஜகுருவாகவும் விளங்கினார். குருச்சேத்திர யுத்தத்தில் துரியோதணனின் கவுரவப் படையில் இருந்து, உயிருடன் இருந்த இருவரில் இவரும் ஒருவர். அர்ச்சுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரிச்சித்து மன்னனுக்கு குருவாக விளங்கியவர். எவர் ஒருவர் கோழைத்தனம் இல்லாமலும், தைரியத்துடன் நேர்வழியிலும் போரிடுகிறார்களோ, அவர்கள் கிருபரின் அம்சமாக பார்க்கப்படுவார்கள்.

இவருக்கான காயத்ரி மந்திரம்..

“ஓம் தனுர்வித்யாய வித்மஹே

ராஜ தர்மாய தீமஹி

தந்நோ க்ருப்பாச்சார்ய ப்ரசோதயாத்”

Tags:    

Similar News