ஆன்மிகம்
விபீஷணன், ராமர்

விபீஷணன் காயத்ரி மந்திரம்

Published On 2020-01-04 04:45 GMT   |   Update On 2020-01-04 04:45 GMT
யார் ஒருவர் ராம பக்தராகவும், நீதியின் வழியிலும், சாந்த குணம் கொண்டவராகவும் இருக்கிறாரோ, அவர் விபீஷணர் அம்சம் பொருந்தியவர் ஆவார்.
ராமாயண இதிகாசத்தில் ராவணனின் தம்பியாக வர்ணிக்கப்படுபவர். ராவணனிடம் பல முறை, சீதையை விடுவிக்கும்படியும், அநியாயத்தின் பாதையில் செல்ல வேண்டாம் என்றும் எடுத்துக் கூறியவர். அதனை ஏற்காது ராவணன் தீய வழியில் பயணித்ததால், ராமபிரானிடம் அடைக்கலமானார். ராவண வதத்திற்குப் பின் ராமனால் இலங்கை அரசனாக முடி சூட்டப்பட்டார். தருமர் நடத்தும் ராஜசூய யாகத்திற்கு தென்திசை நோக்கி படையெடுத்து சென்ற சகாதேவன், விபீஷணனுக்கு தூது அனுப்புகிறார். முற்பிறவியில் தமக்கு அருளிய ராமபிரானே, தற்போது கிருஷ்ணராக அவதரித்துள்ளார் என்பதை அறிந்த விபீஷணன், அவர்களுக்கு தக்க மரியாதை அளித்து, யாகம் நடத்த காரணமாக இருந்தார். யார் ஒருவர் ராம பக்தராகவும், நீதியின் வழியிலும், சாந்த குணம் கொண்டவராகவும் இருக்கிறாரோ, அவர் விபீஷணர் அம்சம் பொருந்தியவர் ஆவார்.

இவருக்கான காயத்ரி மந்திரம்..

“ஓம் ராம பக்தாய வித்மஹே
சர்வாஸ்ரயாய தீமஹி
தந்நோ விபீஷண ப்ரசோதயாத்”
Tags:    

Similar News