ஆன்மிகம்
சூரியன்

சூரிய நமஸ்கார மந்திரம் தமிழில்

Published On 2019-11-14 11:37 IST   |   Update On 2019-11-14 11:37:00 IST
நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழில் உள்ள இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.
சூரியனுக்கு நன்றியை சொல்லி, அவரைப் போற்றும் வகையில் சூரியபகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வணங்குவது இன்னும் சிறந்தது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை பார்த்து, இரண்டு கைகளையும் சேர்த்து, நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அந்த பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.

‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’

Similar News