ஆன்மிகம்
அம்பிகை

வழக்குகளில் வெற்றி தரும் அம்பிகை ஸ்லோகம்

Published On 2019-11-13 05:07 GMT   |   Update On 2019-11-13 05:07 GMT
சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளில் வெற்றி கிடைக்க இந்த ஸ்லோகத்தை திங்கள், வியாழக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்யலாம்.
ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்
வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம்
வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா
ததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர
குஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்
தேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்

பார்வதீம் பாவயாமி!

பஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.

முதலில் கலச ஸ்தாபனம் செய்து, கிழக்கு முகமாக தேவியை கலசத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். யாகாக்னி மேடை செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்தவாறு, ஐவகைப் பழங்கள், எள், புளிச்சாதம் ஆகிய நிவேதனங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு நவதானியங்கள், கொள்ளு, சிவப்பு நிற மலர்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பித்து, பசு நெய்யுடன் தாமரை மலர் சேர்த்து மூலமந்திரம் கூறி யக்ஞம் செய்யலாம்.

மேலும் சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளிலும், விசேஷமாக ஐயனார், முனீஸ்வரன் சந்நிதிகளின் எதிரில் உள்ள குதிரைச் சிலைகளில், முன் செல்லும் பாவனையில் உள்ள காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.
Tags:    

Similar News