ஆன்மிகம்

சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷப் பாட்டு

Published On 2019-05-03 08:49 GMT   |   Update On 2019-05-03 08:49 GMT
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. பிரதோஷ நேரத்தில் பாட வேண்டிய பாடலை பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும், ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும், சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும், திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

சிவாய நமஓம் சிவாய நமஹ!
சிவாய நமஓம் நமச்சிவாய!
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர!
ஆடியபாதா அம்பலவாணா!
கூடியே பாடினோம் பிழைபொறுப்பாயே!
அஞ்செழுத்தில் அமர்ந்த சுந்தரேசா!
நெஞ்சில் நிறைந்திருப்பாயே சொக்கேசா!
சுந்தரர்க்கு தோழனான சுந்தரேசா!
சம்பந்தர்க்கு தந்தையானாய் சொக்கேசா!
மண்சுமந்து கூலிகொண்ட சுந்தரேசா!
பெண் சுமந்து பெருமை கொண்டாய்!
தோடுடைய செவியனே சுந்தரேசா!
தூய வெண்ணீரணிந்தவனே சொக்கேசா!
நரியைப் பரியாக்கிய சுந்தரேசா!
நாரைக்கு முத்தி கொடுத்த சொக்கேசா!
மணிவாசகத்தின் ஒளியானாய் சுந்தரேசா!
தேவாரத்தோடு இணைந்திட்ட சொக்கேசா!
சிவசிவ சிவசிவ சபாபதே!
சிவகாமி சுந்தர உமாபதே!
காலகால காசிநாத பாகிமாம்!
விசாலாக்ஷி சகித விஸ்வநாத ரக்ஷமாம்!
ஆலால சுந்தரம் மீனாட்சி சுந்தரம்!
கல்யாண சுந்தரம் கடம்பவன சுந்தரம்!
நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா!
சிவராஜா சிவராஜா சிவகாமி நாதா சிவராஜா!
என்னப்பன் அல்லவா என்தாயுமல்லவா!
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத் தேவா!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!
சிவசக்தி சிவசக்தி சிவசக்தி ஓம்!

Tags:    

Similar News