ஆன்மிகம்

குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து காக்கும் மந்திரம்

Published On 2019-04-27 06:18 GMT   |   Update On 2019-04-27 06:18 GMT
பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து காக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.
பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.

பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:

இந்த மந்திரத்தை கூறி கடவுளை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.  

Tags:    

Similar News