ஆன்மிகம்

ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம்

Published On 2017-07-15 09:35 GMT   |   Update On 2017-07-15 09:36 GMT
இந்த ஸ்லோகத்தை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மன் சன்னதியில் சொல்லி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேணடும்.
இராகுபகவான் தோஷம் இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பதை தெரிந்து கொள்வோம் இராகுபகவானின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும் இல்லாவிட்டால் இழுபறியாகும்.

திருமணத் தடை குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது எதிர்பாராத நஷ்டம் மனவிரக்தி அடிக்கடி இடமாற்றம் வீண்பழி சுமத்தல் குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும். ஜாதகர் மீது வழக்குகள் தொடரப்படும் இராஜதண்டனை என்னும் பயம் இருந்து வரும். சொந்த வீட்டை விட்டு ஒட்டி விடும் மரண பயம் ஏற்படும்.

கஷ்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும். இராகுபகவான் தோஷம் என்னும் சர்ப்ப தோஷம் ஏற்பட்டால் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கையம்மன் ஆகும்.

அரவெனும் இராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுகனியே ரம்பா போற்றி.
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு
அமுதம் ஈயப் போகுமக் காலை
யுன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்னகியல்
மீண்டும் பெற்றஇராகுவே உனைத்துதிப்பென்
ரட்சிப்பாய் ரட்சிப்பாயே .
தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
Tags:    

Similar News