ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயருக்காக கம்பர் பாடிய பாடல்

Published On 2016-04-28 08:18 IST   |   Update On 2016-04-28 08:18:00 IST
இராமாயணம் பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவர் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:

ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக்கொண்டு இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக்கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான். இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது.

Similar News