ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் 30.4.2019 முதல் 6.5.2019 வரை

Published On 2019-04-30 03:46 GMT   |   Update On 2019-04-30 03:46 GMT
ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து மே மாதம் 6-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
30-ந்தேதி (செவ்வாய்) :

சர்வ ஏகாதசி.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் உற்சவம் ஆரம்பம்.
சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வருதல்.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (புதன்) :

உழைப்பாளர் தினம்.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி.
வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் வீதி உலா.
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வியாழன்) :

முகூர்த்த நாள்.
பிரதோஷம்.
மதுரை வீரராகவப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் பூத வாகனத்தில் பவனி வருதல்.
திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி.
அனைத்து சிவன் கோவில்களிலும் மாலையில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை.
மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (வெள்ளி) :


மாத சிவராத்திரி.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் யானை வாகனத்தில் பவனி.
சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.
வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி வருதல்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
சமநோக்கு நாள்.



4-ந்தேதி (சனி) :

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
அமாவாசை.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் விருட்ச சேவை.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவரணம்.
திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடை யழகு சேவை காண்பித்தருளல்.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி.
திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
சமநோக்கு நாள்.

5-ந்தேதி (ஞாயிறு) :


திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கறி நைவேத்தியம்.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் பிச்சாடன உற்சவம்.
திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.
வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் திருவீதி உலா.
மதுரை வீரராகவப் பெருமாள் பவனி வருதல்.
செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு.
கீழ்நோக்கு நாள்.

6-ந்தேதி (திங்கள்) :

கார்த்திகை விரதம்.
சந்திர தரிசனம்.
திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்பக விமானத்தில் திருவீதி உலா.
வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி.
கீழ்நோக்கு நாள்.
Tags:    

Similar News