ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (4-10-2016 முதல் 10-10-2016 வரை)

Published On 2016-10-04 01:50 GMT   |   Update On 2016-10-04 01:50 GMT
4-10-2016 முதல் 10-10-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை கீழே பார்க்கலாம்.
4-ந் தேதி (செவ்வாய்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதார காட்சி. இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திரபிரபையில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (புதன்) :

* சதுர்த்தி விரதம்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராமாவதார காட்சி. இரவு அனுமன் வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தலிலும் புறப்பாடு கண்டருளல்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாச பெருமாள் திருவீதி உலா.
* வடலூர் வள்ளலார் பிறந்த நாள் விழா.
* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (வியாழன்) :

* திருப்பதி ஏழுமலையப்பன் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு பூபாள வாகனத்திலும் பவனி வருதல்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்ச லீலை, இரவு கருட வாகனத்தில் புறப்பாடு.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

7-ந் தேதி (வெள்ளி) :

* சஷ்டி விரதம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு லட்சுமிகர ஆபரணங்களுடன் கருடோற்சவ சேவை அருளல்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனம், மாலை சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (சனி) :

* திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை, மாலை மோகினி அவதார காட்சி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்கார காட்சி.
* கீழ்நோக்கு நாள்.

9-ந் தேதி (ஞாயிறு) :

* துர்க்காஷ்டமி.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் சிவபூஜை செய்தருளிய காட்சி.
* கீழ்நோக்கு நாள்.

10-ந் தேதி (திங்கள்) :

* சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
* திருப்பதி ஏழுமலையப்பன், திருவகிந்தபுரம் ஆகிய தலங்களில் ரதோற்சவம்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை வெண்ணை தாழி சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

Similar News