ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (27-9-2016 முதல் 3-10-2016 வரை)

Published On 2016-09-27 01:40 GMT   |   Update On 2016-09-27 01:40 GMT
27-9-2016 முதல் 3-10-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
27-ந் தேதி (செவ்வாய்) :

* வைஷ்ணவ ஏகாதசி.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (புதன்) :

* பிரதோஷம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* அனைத்து சிவன் கோவில்களிலும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

29-ந் தேதி (வியாழன்) :

* மாத சிவராத்திரி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

30-ந் தேதி (வெள்ளி) :

* மகாளய அமாவாசை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (சனி) :

* திருநெல்வேலி காந்திமதி அம்மன் லட்சார்ச்சனை ஆரம்பம்.
* குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* இன்று விஷ்ணு தரிசனம் நன்று.
* சமநோக்கு நாள்.

2-ந் தேதி (ஞாயிறு) :

* நவராத்திரி விழா ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்மன் ராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு வீற்றிருந்து அருள்பாலிக்கும் காட்சி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

3-ந் தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாச பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள். 

Similar News