ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (13-9-2016 முதல் 19-9-2016 வரை)

Published On 2016-09-13 01:32 GMT   |   Update On 2016-09-13 01:32 GMT
13-9-2016 முதல் 19-9-2016 வரை நடக்கும் ஆன்மிக முக்கிய நிகழ்வுகளை கீழே பார்க்கலாம்.
13-ந் தேதி (செவ்வாய்) :

* ஓணம் பண்டிகை.
* பக்ரீத் பண்டிகை.
* மதுரை சொக்கநாதர் சட்ட தேரில் பவனி.
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் உற்சவ தீர்த்தவாரி.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* திருநெல்வேலி குறுக் குத்துறை முருகப்பெருமான் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரத உற்சவம்.
* சிதம்பரம் சிவபெருமான் நடராஜர் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (வெள்ளி) :

* பவுர்ணமி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வருதல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.
* மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (சனி) :

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 வடை அலங்காரம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் உலா.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனு மனுக்கு திருமஞ்சன சேவை.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* இன்று சூரிய வழிபாடு செய்வது நல்லது.
* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (திங்கள்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

Similar News