ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (23-8-2016 முதல் 29-8-2016 வரை)

Published On 2016-08-23 01:31 GMT   |   Update On 2016-08-23 01:31 GMT
23-8-2016 முதல் 29-8-2016 வரை நடக்க உள்ள இந்த வார முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
23-ந் தேதி (செவ்வாய்) :

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

24-ந் தேதி (புதன்) :

* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவிலிலும், இரவு தங்க முத்துக் கிடா வாகனத்திலும் பவனி வருதல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (வியாழன்) :

* கோகுலாஷ்டமி.
* கார்த்திகை விரதம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வெள்ளி) :

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

27-ந் தேதி (சனி) :

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திண்டுக்கல், மிலட்டூர் ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி வருதல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (ஞாயிறு) :

* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை வீணை மோகினி அலங்காரத்தில் காட்சி தருதல், இரவு ராம அவதார காட்சி.
* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி பவனி வருதல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்திலும், உப்பூர் விநாயகர் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

Similar News