ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (9-8-2016 முதல் 15-8-2016 வரை)

Published On 2016-08-09 03:36 GMT   |   Update On 2016-08-09 03:36 GMT
9-8-2016 முதல் 15-8-2016 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
9-ந் தேதி (செவ்வாய்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு விழா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சல் சேவை.
* மதுரை மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (புதன்) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் பவனி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேரமான் பெருமாள் கயிலாயம் போகும் நிகழ்வு.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வெள்ளி குதிரை வாகனத்தில் அம்பாள் வீதி உலா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு சுவாமி- அம்பாள் ஏக சிம்மாசனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கில் உலா.
* கீழ்நோக்கு நாள்.

11-ந் தேதி (வியாழன்) :

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேருக்கு எழுந்தருளல்.
* ராமேஸ்வரம் சுவாமி நந்திகேஸ்வரர், அம்பாள் சிறு பர்வதவர்த்தினி அம்மன் ஆகியோர் வெள்ளி யானை வாகனத்தில் பட்டிணப் பிரவேசம்.
* மதுரை மீனாட்சி அம்மன் தங்க குதிரையில் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (வெள்ளி) :

* வரலட்சுமி நோன்பு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு.
* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழா.
* ராமேஸ்வரம் சுவாமி- அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி அம்மன் காலை சட்டத்தேரிலும், இரவு புஷ்ப விமானத்திலும் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.

13-ந் தேதி (சனி) :


* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* மதுரை மீனாட்சி அம்மன் கனக தண்டியலில் பவனி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

14-ந் தேதி (ஞாயிறு) :

* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கால் அலங் கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

15-ந் தேதி (திங்கள்) :

* சுதந்திர தினம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மனுக்கு சப்தாவர்ணம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

Similar News