ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (2-8-2016 முதல் 8-8-2016 வரை)

Published On 2016-08-02 01:24 GMT   |   Update On 2016-08-02 01:24 GMT
2-8-2016 முதல் 8-8-2016 வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
2-ந் தேதி (செவ்வாய்)

* ஆடிப்பெருக்கு.
* ஆடி அமாவாசை.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா.
* திருவாடானை சிநேக வள்ளிஅம்மன் வெண்ணெய் தாழி சேவை, இரவு கமல வாகனத்தில் பவனி.
* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பெருந்திருவிழா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் காலை தங்கப் பல்லக்கு, இரவு மின் விளக்கு அலங்கார வெள்ளித் தேரில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மடி மீது ரெங்கமன்னார் சயன திருக்கோலக் காட்சி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் காலை கயிலாய வாகனத்தில் பவனி. இரவு மகிஷாசுர சம்ஹார லீலை.
* கீழ்நோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் பவனி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம் தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)

* ஆடிப்பூரம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரத உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.
* இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கொடியேற்று விழா.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோவில் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவிலில் ஆடி தபசு உற்சவம் ஆரம்பம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின் விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி வருதல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தவழ்ந்த கோலத்துடன் தபசு மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

* கருட பஞ்சமி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் நூதன மின்விளக்கு அலங்கார விருட்ச வாகனம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தோளுக்கினியானில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

* சஷ்டி விரதம்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின் விளக்கு அலங்காரத்தில் வெள்ளி விமானத்தில் திருவீதி உலா.
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

Similar News