ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (19-7-2016 முதல் 25-7-2016 வரை)

Published On 2016-07-19 01:30 GMT   |   Update On 2016-07-19 01:30 GMT
இந்த வார நடக்க இருக்க முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
19-ந் தேதி (செவ்வாய்)

* பவுர்ணமி.
* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் நாராயணசாமி தீர்த்தம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (புதன்)

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர், வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் சப்தாவரணம்.
* மேல்நோக்கு நாள்.

21-ந் தேதி (வியாழன்)

* வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில் வசந்த உற்சவம், முத்துப்பல்லக்கில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (வெள்ளி)

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.

23-ந் தேதி (சனி)

* சங்கடஹர சதுர்த்தி.
* வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
* இன்று கோவில்களில் விநாயகருக்கு செய்யப்படும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கண்டு வழிபடுவது நன்மை தரும்.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

24-ந் தேதி (ஞாயிறு)

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

25-ந் தேதி (திங்கள்)

* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

Similar News