ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (28.6.16 முதல் 4.7.16 வரை)

Published On 2016-06-28 04:46 GMT   |   Update On 2016-06-28 04:46 GMT
28.6.16 முதல் 4.7.16 வரை உள்ள ஆன்மீக நிகழ்வுகளை பார்க்கலாம்.
28-ந்தேதி (செவ்வாய்) :

* சோழவந்தான் ஜெனன மாரியம்மன் ரத உற்சவம்
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்
* சமநோக்குநாள்

29-ந்தேதி (புதன்) :

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு
* சோழவந்தான் ஜெனன மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, ஊஞ்சலில் விருட்ச சேவை
* சமநோக்குநாள்

30-ந்தேதி (வியாழன்) :

* சர்வ ஏகாதசி
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்
* திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு
* கீழ்நோக்குநாள்

1-ந்தேதி (வெள்ளி) :

* கார்த்திகை விரதம்
* சிதம்பரம் ஆனி உத்திர உற்சவம் ஆரம்பம்
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு
* கீழ்நோக்குநாள்

2-ந்தேதி (சனி) :

* சனிபிரதோஷம்
* மாதசிவராத்திரி
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
* மேல்நோக்குநாள்

3-ந்தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை
* சிதம்பரம் சிவபெருமான் புறப்பாடு
* சமநோக்கு நாள்

4-ந்தேதி (திங்கள்) :

* அமாவாசை
* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழவாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்
* மேல்நோக்குநாள்

Similar News