ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (31.5.16 முதல் 6.6.16 வரை)

Published On 2016-05-31 05:02 GMT   |   Update On 2016-05-31 05:02 GMT
31.5.16 முதல் 6.6.16 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
31-ந்தேதி (செவ்வாய்) :

* தத்தாத்ரேயர் ஜெயந்தி
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்
* மேல்நோக்குநாள்

1-ந்தேதி (புதன்) :

* சர்வ ஏகாதசி
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு
* தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு
* சமநோக்குநாள்

2-ந்தேதி (வியாழன்) :

* பிரதோஷம்
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பங்கி சேவை
* இன்று நந்தியம்பெருமானை வழிபடுவது சிறப்பு சேர்க்கும்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு
* சமநோக்கு நாள்.

3-ந்தேதி (வெள்ளி) :

* மாதசிவராத்திரி
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
* கீழ்நோக்குநாள்

4-ந்தேதி (சனி) :

* அமாவாசை
* கார்த்திகை விரதம்
* திருநெல்வேலி கயிசாசபுரம் கயிலாசநாதர் உற்சவம் ஆரம்பம்
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் தொடக்கம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
* கீழ்நோக்குநாள்

5-ந்தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு
* மேல்நோக்குநாள்

6-ந்தேதி (திங்கள்) :

* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜபெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை
* சமநோக்குநாள்

Similar News