ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (10.5.16 முதல் 16.5.16 வரை)

Published On 2016-05-10 04:46 GMT   |   Update On 2016-05-10 04:46 GMT
10.5.16 முதல் 16.5.16 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
10-ந்தேதி (செவ்வாய்) :

* சதுர்த்தி விரதம்
* காரைக்குடி கொப்புடை அம்மன் உற்சவம் ஆரம்பம். வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்பாள் பவனி.
* குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
* இரவு மின்விளக்கு அலங்காரத்தில் அம்பாள் திருவீதி உலா.
* மேல் நோக்குநாள்

11-ந்தேதி (புதன்) :

* முகூர்த்தநாள்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று சாற்று முறை, புஷ்பப்பல்லக்கில் சுவாமி பவனி வருதல்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் புறப்பாடு
* மதுரை வீரராகவபெருமாள் ரத உற்சவம்
* சமநோக்குறாள்

12-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்தநாள்
* சஷ்டி விரதம்
* திருச்செந்தூர், திருப்பாப்புலியூர், மதுரை, சுவாமி மலை, பழனி ஆகிய திருத்தலங்களில் வைகாசி விசாக உற்சவம் ஆரம்பம்
* காஞ்சி குமரகோட்டம் முருகப்பெருமான் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்
* வீரபாண்டி கவுமாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி
* மேல் நோக்குநாள்

13-ந்தேதி (வெள்ளி) :

* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் ரத உற்சவம்
* காரைக்குடி கொப்புடையம்மன் கயிலாய வாகனத்தில் பவனி
* திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள், திருமோகூர் காளமேகப்பெருமாள், காட்டு பரூர் ஆதிகேசவப்பெருமாள், அரியக்குடி சீனிவாசப்பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்
* கீழ்நோக்குநாள்

14-ந்தேதி (சனி) :

* சமயபுரம் மாரியம்மன் பஞ்சப்பிரகாரம் வலம் வருதல்
* மதுரை கூடலழகர் உற்சவம் ஆரம்பம்
* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் உற்சம்
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு
* திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் வெள்ளி அனுமன் வாகனத்தில் பவனி வருதல்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்
* அரியக்குடி சீனிவாச பெருமாள் பின்னங்கிளி வானத்தில் பவனி
* கீழ்நோக்குநாள்

15-ந்தேதி (ஞாயிறு) :

* வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியில் பவனி, இரவு மேற்கு ரத வீதியில் உலா.
* காளையார் கோவில் அம்பாள் கதிர் குளித்தல், தபசு காட்சி, இரவு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி
* பழனி முருகன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்
* நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் இரவு காமதேனு வாகனத்தில் அம்பாள் புறப்பாடு
* கீழ்நோக்குநாள்

16-ந்தேதி (திங்கள்) :

* ஸ்ரீவாசவி ஜெயந்தி
* திருப்பாப்புலியூரில் நந்தி வாகனம், கோ தரிசனம்.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* பழனி முருகன் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்குநாள்

Similar News