ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (26.4.16 முதல் 2.5.16 வரை)

Published On 2016-04-26 04:50 GMT   |   Update On 2016-04-26 04:50 GMT
26.4.16 முதல் 2.5.16 வரை நடக்கும் ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
26-ந்தேதி (செவ்வாய்) :

* சென்னை சென்னகேசவ பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் இரவு தங்கப்பல்லக்கில் பவனி.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்
* வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா
* சமநோக்குநாள்

27-ந்தேதி (புதன்) :

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம், இரவு புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு கண்டருளல்.
* திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்சவம், வெள்ளி விருட்ச சேவை
* கீழ்நோக்குநாள்

28-ந்தேதி (வியாழன்) :


* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ரதஉற்சவம்
* சென்னை சென்னகேசவ பெருமாள் கோவில் ரதஉற்சவம்
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* கீழ்நோக்குநாள்

29-ந்தேதி (வெள்ளி) :


* முகூர்த்த நாள்
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி
* ராமேஸ்வரம் பர்பதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்
* மேல் நோக்குநாள்

30-ந்தேதி (சனி) :

* சென்னை சென்ன கேசவ பெருமாள் தங்கப்பல்லக்கு, புண்ணிய கோடி விமானத்தில் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு கண்ணாடி பல்லக்கிலும் பவனி.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* மேல்நோக்குநாள்

1-ந்தேதி (ஞாயிறு) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜபெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் சப்தாவரணம்
* மேல்நோக்குநாள்

2-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்தநாள்
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை
* சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* மேல்நோக்குநாள். 

Similar News