ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (12.4.16 முதல் 18.4.16 வரை)

Published On 2016-04-12 06:23 GMT   |   Update On 2016-04-12 06:23 GMT
12.4.16 முதல் 18.4.16 வரை நடக்கும் ஆன்மிக விசேஷங்கள
12-ந்தேதி (செவ்வாய்)

* சஷ்டி விரதம்
* சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் வீதி உலா.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி வருதல்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்று உற்சவம்.
* சமநோக்கு நாள்

13-ந்தேதி (புதன்)


திருநெல்வேலி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியரி கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்கப்பல்லக்கில் பவனி வருதல்.
* மேல்நோக்குநாள்.

14-ந்தேதி (வியாழன்)

* தமிழ்வருடப்பிறப்பு
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிசேஷம்.
* காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தங்க ரதம்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தில் 5008 கனி அலங்காரம்.
* அனைத்து சிவன் கோவில்களிலும் விஷூ தீர்த்தம்.
* சமநோக்குநாள்

15-ந்தேதி (வெள்ளி)

* ராமநவமி
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* சமயபுரம் மாரியம்மன் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
* திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனுவாகனத்திலும் புறப்பாடு.
* திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் காலை கருட வாகனத்திலும்,இரவு அனுமன் வாகனத்திலும் வீதி உலா.
* மேல் நோக்குநாள்

16-ந்தேதி(சனி)

* திருமலை மற்றும் திருப்பதியில் திருப்படி விழா.
* மதுரை மீனாட்சி சொக்க நாதர், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் பவனி.
* திருக்கடவூர் சிவபெருமான் திருக்கல்யாணம்.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.
* ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர், யானை வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ் நோக்குநாள்.

17-ந்தேதி (ஞாயிறு)

* சர்வ ஏகாதசி
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் காலை சன்முணர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச்சப்பரம்.
* மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்.
* நாங்குநேரி வானமாமலைப்பெருமாள் தங்கச் சப்பரத்தில் பவனி
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலமாய் காட்சியருளல், இரவு யாழி வாகனத்தில் புறப்பாடு.
* திருச்சி தாயுமானவர் கயிலாய வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* கீழ்நோக்குநாள்

18-ந்தேதி (திங்கள்)

* திருச்சி தாயுமானவர் ஆலயத்தில் சுவாமி - அம்பாள், அறுபத்து மூவருடன் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் திக்விஜயம்.
* திருவள்ளூர் வீரராகவபெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியருளல்.
* கீழ்நோக்குநாள் 

Similar News