முக்கிய விரதங்கள்

வளர்பிறை அஷ்டமியும்... பைரவர் விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்...

Published On 2022-07-07 01:35 GMT   |   Update On 2022-07-07 01:35 GMT
  • எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் கால பைரவர்.
  • பைரவரை வழிபட சிறந்த தினங்களாக அஷ்டமி தினம் கருதப்படுகிறது.

திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை.

எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.

சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

வளர்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தான் பைரவப் பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. வளர்பிறை அஷ்டமி திதி இருக்கும் ஒரு நாளில் நமக்கு வசதிப்படும் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம்.

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாமே உருவாக்கியிருந்த கர்ம வினைகள் கரையத் துவங்கும், அதனால், ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் பைரவ வழிபாடு நிறைவடைந்தப் பின்னர், நமது மனதில் இருந்த சோகங்கள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும்.

Tags:    

Similar News