முக்கிய விரதங்கள்

இன்று சப்தரிஷி பஞ்சமி விரதம்

Published On 2022-09-01 01:28 GMT   |   Update On 2022-09-01 01:28 GMT
  • நாளை காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இந்த விரதம் அனுஷ்டிக்க காரணமும், தீரும் பிரச்சனைகளையும் பார்க்கலாம்.

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று சப்தரிஷிகளை பூஜித்து விரதம் அனுஷ்டிப்பதால் இந்த நாளுக்கு ரிஷி பஞ்சமி என்று பெயர். கணவன்-மனைவி இருவரும் தம்பதிகளாகவோ அல்லது பெண் தனியாகவோ இதைச் செய்யலாம். இன்று மதியம் நதி, குளம் கிணறு ஆகியவற்றில் குளித்து விட்டு நாயுருவி குச்சியைக் கொண்டு பல் துலக்கி, நெல்லிப்பொடியை தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.

பிறகு வீட்டில் முறையாக கலசங்களில் 1. கஷ்யபர், 2. அத்ரி, 3. பரத்வாஜர், 4. விசுவாமித்ரர், 5. கவுதமர், 6. ஜமதக்னி, 7. வசிஷ்டர் ஆகிய 7 மகரிஷிகளுடன் அருந்ததியையும் சேர்த்து ஆவாகனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

பிறகு 7 பேரை 7 மகரிஷிகளாக பாவித்து சப்தரிஷிகளுக்கு நிவேதனம் செய்ததை அவர்களுக்கு தானமாகத் தர வேண்டும். அன்று இரவு ரிஷிகளின் சரித்திரத்தை சிரவணம் செய்து, மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

பெண்களுக்கு விலக்கான அந்த நாட்களில் ஆலய வழிபாடு, தெய்வ வழிபாடு போன்ற எந்த ஒரு செயல்களிலும் பெண்கள் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும் என்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறுகிறது வேதம். அப்படி இல்லாமல் தெரிந்தோ தெரியாமலோ அந்த காலங்களில் பெண்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்தால், அதனால் அந்தப் பெண்மணியின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அந்த நாட்களில் நியமங்களை கடைபிடிக்காமல் இருந்த தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காகவே ரிஷி பஞ்சமி விரதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News