முக்கிய விரதங்கள்

இன்று ஆனி அமாவாசை.. விரதம் இருந்து வழிபாடு செய்தால் இந்த பிரச்சனைகள் தீரும்...

Published On 2022-06-28 01:34 GMT   |   Update On 2022-06-28 01:34 GMT
  • சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது.
  • ஆனி மாதம் இறைவழிபாடு மேற்கொள்ள ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது.

ஆனி மாத அமாவாசை தினமான இன்று காலையில் குளித்து விட்டு, ஆற்றங்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் வைத்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி , அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டியை கழித்திட வேண்டும்.

ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். காரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Tags:    

Similar News