முக்கிய விரதங்கள்
வராஹி

வளர்பிறை பஞ்சமி விரதமும்... வராஹி வழிபாட்டு பலன்களும்...

Published On 2022-05-05 04:51 GMT   |   Update On 2022-05-05 04:51 GMT
பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.
பஞ்சமி திதி என்பது வராஹியை விரதம் இருந்து வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில்

வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வராஹிதேவி.

சப்தமாதர்களில் வராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், விரதம் இருந்து இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும்

வளர்பிறை பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய… சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வராஹி தேவி.

வராஹி தேவியின் திருநாமங்கள் 1. பஞ்சமீ 2. தண்டநாதேஸ்வரி 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வராஹி 7. போத்ரிணி 8. சிவா

9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி.

ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரெண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்ய வேண்டும். அப்போது செவ்வரளி முதலான

செந்நிற மலர்களை அன்னைக்குச் சூட்டுவது கூடுதல் மகத்துவம் கொண்டது.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.
Tags:    

Similar News