ஆன்மிகம்
சக்தியுடன் சிவபெருமான்

சங்கடங்களை நீக்கும் ஐந்து வகையான பிரதோஷ விரதங்கள்

Published On 2021-03-23 07:20 GMT   |   Update On 2021-03-23 07:20 GMT
சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கந்தப் பிரதோஷம்:- சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் ‘கந்தப் பிரதோஷம்’. இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

சட்ஜ பிரபா பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

அஷ்டதிக் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

நவக்கிரகப் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது ‘நவக்கிரகப் பிர தோஷம்’. இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அரு ளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

துத்தப் பிரதோஷம்:- அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
Tags:    

Similar News