ஆன்மிகம்
முருகன்

கிருத்திகை நட்சத்திரத்தன்று இவருக்கு விரதமிருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்

Published On 2021-03-04 04:10 GMT   |   Update On 2021-03-04 04:10 GMT
கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.
அழகு முருகனின் நட்சத்திரம் விசாகம் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.

வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன்.
Tags:    

Similar News