ஆன்மிகம்
அம்மனுக்கு விரதம் இருக்க உகந்த மாதம்

அம்மனுக்கு விரதம் இருக்க உகந்த மாதம்

Published On 2019-08-08 06:50 GMT   |   Update On 2019-08-08 06:50 GMT
ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து நாட்களிலும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் விரத வழிபாட்டிற்குரிய ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இம்மாதத்தில் வருகின்ற அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பராசக்தியை விரதம் இருந்து வழிபடுவதற்கு ஏதுவான தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு வாசமிக்க பூக்களை சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயாசம் நைவேத்யம் வைத்து, மாவிளக்கு தீபமேற்றி மேற்கூறிய சக்தி மூல மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை துதித்து வழிபடுவதால் உடல் மற்றும் மனோபலம் பெருகும்.

குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். குறிப்பாக திருமண வயதை அடைந்தும் வரன் அமையாமல் வருந்திய பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் வாழ்க்கை சிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு கிடைக்கும். கல்வி கற்பதில் இருந்து வந்த தடைகளும், தாமதங்களும் நீங்கி சிறந்த முறையில் தேர்ச்சி பெற முடியும். தொழில் வியாபாரங்களில் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் அதிகரிக்கும்.

வீட்டில் இருக்கின்ற தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் பெருகும். துஷ்ட சக்திகளால் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் நீங்கி வளமை பெருகும். அன்னை ஆதிபராசக்தியின் மகிமையை உணர்ந்த பலர் வருடம் தோறும் விரதம் இருந்து மாலை அணிந்து அவளை தரிசிக்க மருவூர் செல்கின்றனர். 
Tags:    

Similar News