ஆன்மிகம்

அஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்

Published On 2018-12-01 01:35 GMT   |   Update On 2018-12-01 01:35 GMT
அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன், பொருளையும் தருவார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
Tags:    

Similar News