ஆன்மிகம்

விரத காலத்தில் பழ ஆகாரங்களை சாப்பிடலாமா?

Published On 2017-10-07 09:28 GMT   |   Update On 2017-10-07 09:28 GMT
சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே மிகவும் சிறந்த பலன்களை அளிக்கும்.
விரத காலத்தில் பழ ஆகாரங்கள் சாப்பிடலாம். விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். பழத்தை உணவாகக் கொள்வதே பழ ஆகாரம் அதாவது பலகாரம் ஆகும்.

ஆனால் சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்று தவறாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது உண்மையான விரதம் ஆகாது.

ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

Tags:    

Similar News