ஆன்மிகம்

நவராத்திரி அஷ்டமி விரத பூஜை அவசியம்

Published On 2017-09-27 08:17 GMT   |   Update On 2017-09-27 08:17 GMT
ஒருவனுக்கு நவராத்திரி நாட்களில் நியமமாகப் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவன் அஷ்டமி தினம் அவசியம் விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.
ஒருவனுக்கு நவராத்திரி நாட்களில் நியமமாகப் பூஜை நடத்துவதற்குப் போதிய வசதி இல்லாமலிருந்தால் அவன் அஷ்டமி தினம் அவசியம் விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

ஏனென்றால் தட்சனின் யாகத்தை அழித்த பத்ரகாளி அஷ்டமி தினத்தன்று தோன்றினார். எனவே அன்று பூஜைகளை விசேஷமாகச் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல கம்சனை அழிக்க கிருஷ்ணன் அவதரித்த அதே அஷ்டமி தினத்தன்று தான் மகா மாயையான துர்க்கையும் நந்தகோபன் இல்லத்தில் அவதரித்தாள்.

ஆகவே துர்க்காஷ்டமி மிகுந்த விசேஷமுடையது. சக்தியற்றவர்களாக இருப்போர் நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் உபவாசத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.

நவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பயன் அடைவார்கள்.
Tags:    

Similar News