ஆன்மிகம்

நவராத்திரி: துர்க்கை விரத வழிபாடு

Published On 2017-09-26 07:06 GMT   |   Update On 2017-09-26 07:07 GMT
துர்க்கை தீயவைகளை அழிப்பவள், துர்க்கை மகிஹாஹீரன் என்ற அசுரனை அழிக்க உருவானவள். நவராத்திரிக்கு விரதமிருந்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும்.
துர்க்கை, ஆதிபராசக்தி, பார்வதி, சக்தி, பவானி, காளி என பல பெயர்களைக் கொண்டவள். போர் கடவுளாக பார்க்கப்படுபவள், வணங்கப்படுபவள். தீயவைகளை அழிப்பவள், துர்க்கை மகிஹாஹீரன் என்ற அசுரனை அழிக்க உருவானவள். ஆக்கப் பூர்வ உயர் சக்தி கொண்டவள்.

* முதல் வலது கையில் சக்கரம் கொண்டவள். இது வாழ்வின் தர்மத்தினை கூறுவது, அதுபோல வாழ்வில் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்.

* இரண்டாவது வலது கையில் கத்தி உள்ளது. தீயவைகளை அதாவது நம்மிடம் உள்ள தீயவைகளை ஒருவர் வெட்டி எறிய வேண்டும்.

* மூன்றாவது வலது கையில் கதைஉள்ளது. ஆஞ்ச நேய பகவானை நினைவுறுத்துவது. பக்தியும் சரணா கதியும் வேண்டுமென அறிவுறுத்துவது. விளைவுகளை இறைவனின் ஆணை என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மன உறுதி வேண்டும் எனக் கூறுவது.

* நான்வது வலது கை ஆசிர் வாதமும், மன்னிப்பும் வழங்குகின்றது. நம்மை நாமே நமது தவறுகளை உணர்ந்து மன்னித்துக் கொள்ள வேண்டும்.

* துர்க்கை அம்பாளின் இடது முதல் கையில் சங்கு இருக்கின்றது. இது மகிழ்ச்சியை குறிக்கின்றது. நமது அன்றாட கடமைகளை மகிழ்ச்சியுடன் பணியாற்ற வேண்டும் எனக் கூறுகின்றது.

* வில்லும் அம்பும் இரண்டாவது கையில் இருக்கின்றது. ஸ்ரீராமனைப் போன்று வாழ்க்கையில் பல சோதனைகள் வந்த பொழுதும் பண்புகளை இழக்காது இருக்க வேண்டும் என்று பொருள் கூறுகின்றது.

* தாமரை மூன்றாவது இடக்கையில் இருக்கின்றது. உலக வாழ்வில் இருந்தாலும் அதில் ஒட்டாது இருக்க வேண்டும். அசுத்தமான குளத்தில் இருந்தாலும் தாமரை பூத்தாலும் மிக சுத்த மாக மலர்ச்சியாய் இருப்பது போல் வாழ்வில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்பதனை தாமரை உணர்த்துகின்றது.

துர்க்கை நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வையுடன் அழகாகத் திகழ்கிறாள். வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள். இவளைக் கொற்றவை என்றும், காளி என்றும் குறிப்பிடுவார்கள்.

நவராத்திரிக்கு துர்க்கையை விரதமிருந்து வழிபாடு செய்தால் எதிரிகளின் தொல்லை அகலும்.
Tags:    

Similar News