ஆன்மிகம்
பக்ரீத் பண்டிகையையொட்டி வீடுகளிலேயே சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி வீடுகளிலேயே சிறப்பு தொழுகை

Published On 2020-08-01 04:36 GMT   |   Update On 2020-08-01 04:36 GMT
தற்போது கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை ஆகும். இதனையொட்டி நேற்று நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து ஆண்களும், பெண்களும் தனித்தனியே சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர்.

செல்போனில் குறுஞ்செய்தி மூலமாகவும் பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
Tags:    

Similar News