ஆன்மிகம்
பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

தஞ்சை அருகே பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

Published On 2020-07-11 04:25 GMT   |   Update On 2020-07-11 04:25 GMT
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி ஜீம்ஆ பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கிராமங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி கிராமங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள பள்ளிவாசல்களில் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தொழுகை நடத்தி கொள்ள அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி ஜீம்ஆ பள்ளிவாசலில் நேற்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தொழுகை நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆறடி இடைவெளி விட்டு, முககவசம் அணிந்தவாறு தொழுகையில் கலந்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு பிறகு பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News