ஆன்மிகம்
இஸ்லாம் தொழுகை

ரமலான் தொழுகையை வீடுகளில் நிறைவேற்றுங்கள்: அரசு தலைமை ஹாஜி வேண்டுகோள்

Published On 2020-05-21 03:19 GMT   |   Update On 2020-05-21 10:24 GMT
இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி அரசு தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை :

தமிழக அரசின் தலைமை ஹாஜி மவுலவி முப்தி சலாகுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று ஆபத்து காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ரமலான் பண்டிகை தொழுகையை பள்ளிவாசல் அல்லது திடல்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News