ஆன்மிகம்
இஸ்லாம்

நோன்பின் மாண்புகள்: ஜகாத் கொடுப்போம்

Published On 2020-05-16 05:06 GMT   |   Update On 2020-05-16 05:06 GMT
ரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று. ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘தூய்மை’ என்றே பொருள்.
ரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று. ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘தூய்மை’ என்றே பொருள்.

இதுகுறித்து இறைமறை இப்படிக்கூறுகிறது: (நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து ஜகாத்திற்கானதை எடுத்துகொண்டு அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக. (திருக்குர்ஆன் 9:103)

நமது உடலை நோன்பு தூய்மைப்படுத்துவதை போல நமது சொத்துக்களை ஜகாத் தான் தூய்மைப்படுத்தும். எனவே வசதி  பெற்றவர்கள் தம் கையிருப்பில் பத்தரை பவுன் தங்க நகை வாங்கும் அளவுக்கு பணமாக வைத்திருந்தால் ஆண்டுக்கு ஒருமுறை நாற்பதில் ஒருபங்கு அதாவது நூற்றுக்கு இரண்டரை சதவீம் ஜகாத் கொடுப்பது கட்டாய கடமையாகும்.:

தங்கம், வெள்ளி, விளைதானியங்கள், ஆடு, மாடு, ஒட்டகங்கள், வியாபார பொருட்கள் என இவையாவற்றிற்கும் ஜகாத் உண்டு. அவற்றுக்கான சட்டங்களை தெளிவான முறையில் தெரிந்து ஏழை, எளியவர்களுக்கு மனப்பூர்வமாக வழங்கிட வேண்டும்.

அல்லாஹ் கூறியுள்ளான்: எவர்கள் தங்கத் தையும், வெள்ளியையும் சேமித்து வைத்து அவற்றை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யவில்லையோ, அவர்களுக்கு நோவினை தரும் வேதனையை கொண்டு(நபியே) நீர் சுபச்செய்தி கூறுவீராக.

நரக நெருப்பில் அவை பழுக்கக்காய்ச்சப்பட்டு அவற்றை கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாப்புறங்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடு போடப்படும்(அந்த மறுமை) நாளில், இது (தான் உங்களுக்காக நீங்கள் சேமித்து வைத்தது: நீங்கள் சேமித்து வைத்திருந்ததை (இப்போது) நீங்கள் சுவைத்து பாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும். (திருக்குர்ஆன் 9:34,35)

ஜகாத் இஸ்லாத்தின் ஐம்பெரும் அடிப்படைக்கடமைகளில் ஒன்று. குர்ஆன் முழுவதும் தொழுகையை பற்றி கூறப்பெற்றுள்ள இடங்களில் பெரும்பாலும் ஜகாத் இணைத்தே சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

காரணம், நமது இறைவனுக்கு செய்ய வேண்டிய தொழுகை நமக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறே நம்மைச்சுற்றியுள்ள ஏழை மக்களுக்கு சேரவேண்டிய ஜகாத் அவர்களுக்கு போய் சேர்வதும் மிக முக்கியம்.

செல்வந்தர்கள், தமக்கு செல்வத்தை தந்த அந்த இறைவனை அஞ்சி, சரிவர கணக்கிட்டு வருடந்தோரும் ஜகாத்தை கொடுத்தாலே போதும் நம்மை சுற்றியுள்ள ஏழைகள் ஏற்றம் பெற்றுவிடுவர்.

ஆனால் நம்மில் பலரும் பணம் தீர்ந்து போய்விடுமோ நாமும் ஏழையாகி விடுவோமோ என்று நினைத்து நினைத்து திடீரென ஏற்படும பெரும் பொருளாதார நெருக்கடிகளில் நோய் நொடிகளில் அல்லது பேராபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர். அப்போது தான் அவர்களது பணம் கண்ணுக்கு தெரியாமலேயே கற்பூரமாய் கரைந்து விடுகிறது.

இனியேனும் இறைவனை அஞ்சி முறையாக ஜகாத் கொடுப்போமாக.

மவுலவி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3 
Tags:    

Similar News