ஆன்மிகம்
இஸ்லாம்

தர்மங்கள் செய்திடுவோம்

Published On 2020-04-29 08:33 GMT   |   Update On 2020-04-29 08:33 GMT
புதிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்பாடுகளில் தர்மமும் ஒன்று. நாம் செய்யும் தர்மங்கள் தான் நம்மை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன.
புதிதமான இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல்பாடுகளில் தர்மமும் ஒன்று. நாம் செய்யும் தர்மங்கள் தான் நம்மை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. எனவே நாம் நமது தர்மங்களை என்றென்றும் நிறுத்தி விடக்கூடாது.

நம்பிக்கையாளர்களே (தர்மம் செய்யக்கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்துவெளியாக்கிய (தானியம். கனிவர்க்கம் ஆகிய)  செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளை கொடுக்க விரும்பாதீர்கள். (ஏனென்றால், கெட்டுப்போன பொருள்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்)எவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடியர்களாக அன்றி வாங்கிக் கொள்ளமாட்டீர்கள்( ஆகவே நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன். மிக்க புகழுடையவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன்2:267)

“(நீங்கள் தர்மம் செய்தால்) சைத்தான் உங்களுக்கு வறுமையை கொண்டு பயங்காட்டி மானக்கோடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால் அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன்னுடைய மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான் அன்றி அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவனும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்“. (திருக்குர்ஆன் 2:268)

“( நீங்கள் செய்யும்) தர்மங்களை நீங்கள் வெளிப்படையாக செய்தால் அதுவும் நன்றே. (ஏனெனில், அது பிறரையும் தர்மம் செய்யும் படி தூண்டக்கூடும்) ஆயினும் அதனை நீங்கள் மறைத்தே கொடுப்பது, அதுவும் அதனை ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை (பயக்கும்). மேலும் அது (அதாவது இருவகை தர்மமும்) உங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாவும் ஆகும். நீங்கள் செய்யும் (வெளிப்படையான மற்றும்) மறைவான அனைத்தையும் அல்லாஹ் மிகவும் நன்கறிவான்”. (திருக்குர்ஆன் 2:274)

மேற்கண்ட மூன்று வசனங்களும் நாம் தர்மம் செய்வது எப்படி. அது எதிலிருந்து, அது எவ்வாறு என்பது குறித்து மிகத்தெளிவாக கூறிக்காட்டுகிறது. இதனால் தான் தர்மம் அது (தவறான நம்) தலைவிதிகளை தடுத்து நிறுத்தும் என்று நபிகளார் கூறி நமக்கு நல்வழி காட்டினார்கள். தர்மம் என்பது பணத்தை கொடுப்பதில் மட்டும் இல்லை. நற்காரிகங்களை செய்வதும் ஒரு வகைளில் தர்மம் தான்.

உன் நண்பனை சந்திக்கும் போது நீ உன் நண்பனை பார்த்து புன்முறுவல் பூப்பதும் கூட ஒரு தர்மம் தான். என்று நபிகளார் கூறியிருப்பது இங்கு நாம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். எனவே இப்புனித நாட்களில் அதிகமதிகம் நாம் தர்மங்களை செய்து இறைஅருளைப்பெறுபோமாக.

மவுலகி எஸ்,என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
Tags:    

Similar News