ஆன்மிகம்
வீடுகளிலேயே ரமலான் நோன்பு திறப்பு

வீடுகளிலேயே ரமலான் நோன்பு திறப்பு

Published On 2020-04-27 09:39 IST   |   Update On 2020-04-27 09:39:00 IST
இஸ்லாமிய மக்கள் நேற்று தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி நோன்பு கடைப்பிடித்தனர். மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து அதனுடன் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.
ரமலான் மாதத்தில் ஆண்டுதோறும் ரமலான் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

அந்தவகையில் ரமலான் நோன்பு நேற்று முதல் கடைப்பிடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவில் அமலில் உள்ளதால் மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ரமலான் நோன்பு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் இஸ்லாமிய மக்கள் நேற்று தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி நோன்பு கடைப்பிடித்தனர். மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து அதனுடன் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்தனர்.

Similar News