ஆன்மிகம்
இஸ்லாம்

இறையருள் மாதமே வருக...

Published On 2020-04-25 10:34 IST   |   Update On 2020-04-25 10:34:00 IST
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். காரணம் இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு அருளப்பெற்றது.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் புனிதமாக கருதப்படும் மாதம் இந்த ரமலான் மாதம். காரணம் இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆன் நபிகள் நாயகத்திற்கு அருளப்பெற்றது. இதைப்பற்றி இறைவன் கூறுவதை பாருங்கள்:

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு  (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கி அருளப்பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மா தம் நோப்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில்விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்.) (திருக்குர்ஆன் 2:185)

எனவே இம்மாதத்திலுள்ள ஒவ்வொரு தினங்களையும் நாம் கட்டாயம் கண்ணியப்படுத்த வேண்டும். முதலில் தினமும் நாம் குர்ஆனை ஓதிப்பார்க்க வேண்டும். காலை முதல் மாலை வரை கட்டாயம் உண்ணா நோன்பும் இருக்க வேண்டும். முடியாதவர்களுக்கு விதிவிலக்கும், அதற்கு பரிகாரமும் உண்டு. நம்மால் தாங்க முடியாத எந்த ஒன்றையும் அல்லாஹ் நமக்கு கடமையாக்குவதும் இல்லை. இன்னொரு இறைவசனம் இப்படிக் கூறிக்காட்டுகிறது:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டு உள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவங்களாக ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

இந்த நோன்பு நம்மின் மீது மட்டும் கடமையாக்கப்டவில்லை நமதுமுன்னோர்கள் மீதும் கடமையாக்கப்பட்ட ஒன்றுதான் இது என்று இவ்வசனம் தெளிவுபடுத்திக்காட்டுகிறது.

இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ரஹ்மத் எனும்இறையருள் நிறைந்த நாட்கள். எனவே இந்நாட்களில் அதிகமதிகம் இறையருளை அல்லாஹ்விடம் கேட்டு பிரார்த்தனை செய்யவேண்டும், அடுத்து பத்துநாட்கள் மஅஃபிரத் எனும் பாவ மன்னிப்பிற்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம்நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். இறுதி பத்துநாட்கள் இத்க் எனும் நரகத்தின் விடுதலைக்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் நரக வேதனைகளை விட்டும் அதிகமதிகம் நாம் அல்லாஹ் விடம் பாதுகாப்பு தேட வேண்டும்

மவுலவி எஸ்.என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Similar News