ஆன்மிகம்
வாகையடி பக்கீர்பாவா தர்கா

வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரிவிழா நாளை தொடங்குகிறது

Published On 2020-03-12 03:43 GMT   |   Update On 2020-03-12 03:43 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரிவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் ஒலியுல்லா தர்காவும் ஒன்று.

இந்த தர்காவில் கந்தூரி விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

21-ந்தேதி இரவு 7 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

22-ந்தேதி மதியம் 12 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம், 8 மணிக்கு கொடியேற்றம் ஆகியவை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெறுகிறது. இதற்கு திட்டுவிளை ஜமாத் தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்குகிறார். முகமது அனிபா, அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திட்டுவிளை ஜூம்ஆ பள்ளி இமாம் முகமது இப்ராகிம் பைஜி தொடக்க உரையாற்றுகிறார். அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சர்புதீன் ஆலீம் சிறப்புரையாற்றுகிறார். விழாக்குழு தலைவர் நாஞ்சில் ஹாஜா நன்றி கூறுகிறார்.

23-ந்தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி, 25-ந்தேதி காலை 10 மணிக்கு 3-ம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திட்டுவிளை உதுமான் லெப்பை சாகிபு சுன்னத் ஜாமாத் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தர்கா கந்தூரி விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News