ஆன்மிகம்
ராமநத்தம் அருகே சந்தன கூடு ஊர்வலம்

ராமநத்தம் அருகே சந்தன கூடு ஊர்வலம்

Published On 2020-03-11 03:37 GMT   |   Update On 2020-03-11 03:37 GMT
ராமநத்தம் அருகே வடகராம்பூண்டியில் உள்ள ஹஜரத் ‌ஷாசானி சுல்தான் வலியுல்லாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
ராமநத்தம் அருகே வடகராம்பூண்டியில் உள்ள ஹஜரத் ‌ஷாசானி சுல்தான் வலியுல்லாவின் சந்தனக்கூடு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் குழந்தை இல்லாதவர்கள் இரவு முழுவதும் தங்கி, தொழுதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் எவ்வித பாகுபாடும் இன்றி விழாவில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஹஜரத் ‌ஷாசானி சுல்தான் வலியுல்லாவின் சமாதியில் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் நள்ளிரவில் சந்தனகூடு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் வடகராம்பூண்டி, கீழ்கல்பூண்டி, கொரக்கவாடி, தைக்கால், வி.களத்தூர், தொழுதூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் திருச்சி, சேலம், ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை இனாம்தாரர்கள் சையத் மக்பூல் ‌ஷா உசைனி, ‌ஷாஜகான், சையத்அலி, சையத் ரபிக், சையத் சுல்தான் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News