ஆன்மிகம்
கந்தூரி விழா கொடியேற்றத்தை முன்னிட்டு, யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா வந்தபோது எடுத்த படம்.

குலசேகரன்பட்டினம் சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா

Published On 2020-02-28 03:23 GMT   |   Update On 2020-02-28 03:23 GMT
குலசேகரன்பட்டினம் சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் ஹாஜி செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. இரவில் தர்கா முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் துஆ ஓதி, நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு தொழுகை, மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி இரவில் மார்க்க சொற்பொழிவுக்கு பின்னர் சந்தனம் பூசப்பட்டு, அபூர்வ துஆ ஓதப்படுகிறது.

விழாவின் சிகர நாளான 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சந்தனக்கூடு பவனி நடைபெறும். 10-ந்தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கல், ஹத்தம் தமாம் செய்தல் நடைபெறும். 11-ந்தேதி இரவில் விளக்கு ஏற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 12-ந்தேதி கொடி இறக்கப்பட்டு, நேர்ச்சை உணவு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News