ஆன்மிகம்
கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2019-11-15 09:20 IST   |   Update On 2019-11-15 09:20:00 IST
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் இந்தஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா நேற்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தர்காவில் உள்ள கொடிமரத்தில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. சிலம்பாட்டம்,மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, குதிரையுடன் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு வலம் வந்தது.

விழாவையொட்டி நேற்று இரவு 7 மணி மற்றும் 12 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நாகூர் சாதமின் கச்சேரியும், 16-ந் தேதி ஜப்பான் அலுவா, கொச்சி ஜியா-உல்-ஹக் ஆகியோரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையதுபாபுஜான், சுல்தான்பாஷா, தாஜூதீன், பாபு மற்றும்தர்கா பரம்பரை ஹக்தார்கள்,விழா குழுவினர் செய்து வருகிறார்கள். 

Similar News