ஆன்மிகம்
பாலக்கரை ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசலில் நடந்த மொகரம் விழாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தீ மிதித்த காட்சி.

மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்

Published On 2019-09-12 03:23 GMT   |   Update On 2019-09-12 03:23 GMT
திருச்சி பாலக்கரை பகுதியில் மொகரம் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தீ மிதித்தனர்.
திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் வேர்ஹவுஸ் அருகே பழமை வாய்ந்த ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நபிகள் நாயகத்தின் திருப்பேரர்கள் ஹஜ்ரத் இமாம் ஹசேன்(ரலி), ஹஜ்ரத் இமாம் ஹுசேன்(ரலி) நினைவாக மொகரம் தியாக திருநாள் மதநல்லிணக்க நாளாக நடத்தப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு மொகரம் பண்டிகை விழா தேசிய தர்காக்கள் பேரவை மற்றும் மொகரம் விழா கமிட்டி சார்பில் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ‌‌ஷமிமுல்லா‌ஷா பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் இரவு அலாவா எனப்படும் நேர்த்திக்கடனாக தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தர்காக்கள் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News