ஆன்மிகம்

ரமலானும் அதன் பயனும்

Published On 2019-06-05 05:54 GMT   |   Update On 2019-06-05 05:54 GMT
ரமலான் மாதத்தில் மக்கள் இறைவனை வணங்குவதிலும், அவனுக்காக நோன்பு வைப்பதிலும் அதிகமாக ஈடுபடுவதால் அவனின் முன், பின் செய்த பாவங்கள் எரிந்து போய்விடுகின்றன. ஆகவே இப்பெயர்.
இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டாடும் நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது ரம்ஜான் மாதம். இந்த மாதம் இஸ்லாமிய காலண்டரின் 9-வது மாதமாகும். ‘ரமல்’ என்ற அரபிச் சொல்லிலிருந்து பிறந்தது “ரமலான்”. ரமல் என்றால் எரிகிறது என்பதாகும். இம்மாதத்தில் மக்கள் இறைவனை வணங்குவதிலும், அவனுக்காக நோன்பு வைப்பதிலும் அதிகமாக ஈடுபடுவதால் அவனின் முன், பின் செய்த பாவங்கள் எரிந்து போய்விடுகின்றன. ஆகவே இப்பெயர்.

இம்மாதத்தில்தான் புனிதநூல் குர்ஆனும் அருளப்பெற்றது. மற்ற புனித வேதங்களான “ஸஹ்பு” இப்ராஹிம் (ஸல்) அவர்களுக்கும், மூஸா (ஸல்) அவர்களுக்கு “தெளராத்’.,’ தாவூத் (ஸல்) அவர்களுக்கு., “ஸபூர்” ஈஸா (ஸல்) அவர்களுக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டன.

இம்மாத முதல் நாளிலிருந்து 29-ம் நாள் வரை நோன்பு திறக்கும் வேளையில், 10 லட்சம் பேர் நரகத்தில் இருந்து விடுதலை பெறுகின்றனர். ரமலான் மாத 27-வது இரவிற்கு “லைலத்துல் கதர் இரவு என்ற பெயர். இந்த இரவில்தான் புனித “திருக்குர்ஆனை” இறைவன் அருள தொடங்கினான். இந்த ரமலான் இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். அதில் ஜிப்ரீலாகிய மலக்கு, பரிசுத்த ஆவியும், இறைவனின் கட்டளையின் பேரில் மக்களுக்கு வயது, உணவு, வசதி, மழை முதலியவைகளை அளிக்க சகல காரியங்களுடன் இறங்கி கேட்டவைகளை அளிக்கின்றனர்.

இது வசதியற்றவர்களுக்கு பொருள்களை வாரி வழங்கும் மாதம். ஏழைகளுக்கு உபகாரம், உணவில் அபிவிருத்தியை உண்டாக்கும் மாதம். இம்மாதத்தில் ஒரு இறைவனின் கடமையை செய்தால் எழுபது கடமைக்குரிய நன்மைகளை அல்லாஹ் அளிப்பான். கண்ணியமும், சிறப்பும் நிறைந்த புனித மாதம். “தராவீஹ்” என்னும் தொழுகையை உடையதும், பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு பலன் அளிக்கும் மாதம்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட ரமலான் மாதத்தில் 30 நோன்புகள் வைத்து இறைவனை தொழுது இன்று “ஈதுல் பிதர்” என்னும் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
Tags:    

Similar News