ஆன்மிகம்

இறை நம்பிக்கை தரும் பரிசு

Published On 2019-06-04 04:38 GMT   |   Update On 2019-06-04 04:38 GMT
மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்திற்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும். நமது நன்மைகளும், தீமைகளும் தராசில் வைத்து நிறுக்கப்படும். நன்மை செய்தோருக்கு சொர்க்கமும், தீமை புரிந்தோருக்கு கொடுமையான நரகமும் உண்டு.
நமது சொல், செயல் அனைத்தும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மனித வாழ்க்கையில் நாம் எப்போதும் மறக்கக்கூடாது.

மறுமை நாளில் நமது செயல்கள் அனைத்திற்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும். நமது நன்மைகளும், தீமைகளும் தராசில் வைத்து நிறுக்கப்படும். நன்மை செய்தோருக்கு சொர்க்கமும், தீமை புரிந்தோருக்கு கொடுமையான நரகமும் உண்டு.

மனித வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திலும அவசரப்படுவது ஷைத்தானின் செயல் ஆகும். இருப்பினும் 5 விஷயங்களில் நாம் அவசரப்படுவது நன்மையாகும் அவை வருமாறு:

* வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உடனே அவரை நாம் உபசரிக்க வேண்டும். இதில் எந்த தாமதமும் செய்யக்கூடாது.

* ஒருவர் மரணம் அடைந்து விட்டால் உடனே அவரை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் தாமதம் செய்வது குற்றமாகும்.

* ஆணோ, பெண்ணோ திருமண வயதை அடைந்ததும், அவர்களுக்கு பொருத்தமான ஜோடி அமைந்து விட்டால் உடனே திருமணத்தை செய்து வைக்க வேண்டும்.

* ஒருவருக்கு கடன் இருந்தால் அதை விரைவில் கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். கடன் தொகையை திருப்பி செலுத்த தாமதம் செய்யக்கூடாது.

* அறிந்தும், அறியாமலும் பாவம் செய்து விட்டால் உடனே இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அந்த பாவத்தில் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும்.

அதுபோல மரணம் குறித்த நினைவு ஒருவரது மனதில் வந்துவிட்டால் பின்வரும் 3 காரியங்கள் மூலம் இறைவன் அவனுக்கு நன்மைகள் செய்கின்றான்.

* பாவங்களுக்கு உடனே பரிகாரம் தேட வேண்டும் என்று நினைவு அதிகரித்து அவன் அதிகமாக பாவ மன்னிப்பு கேட்பான்.

* போதும் என்ற மனம் அவனுக்கு ஏற்பட்டு விடும். பேராசை போன்ற தீய குணங்கள் அவனை விட்டு விலகிவிடும்.

* இறைவழிபாட்டில் அவன் அதிகமாக ஈடுபடுவான்.  

அதுபோல மரணத்தை மறந்து செயல்பட்டால் 3 காரியங்கள் மூலம் அவனை இறைவன் சோதிப்பான். அவை:

* தவறுகள் செய்து விட்டால் பின்னர் பாவமன்னிப்பு கேட்கலாம் என்ற தள்ளிப்போடுவான்.

* உலக வாழ்வில் ஆசையும், விருப்பமும் அதிகரித்து அதிகமான தீமைகள், கெடுதல்கள் செய்ய தயங்கமாட்டான்.

* இறைவனை வழிபடுவதில் சோம்பேறித்தனமும், அலட்சியமும் ஏற்படும்.

இறைவன் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் நமக்கு கிடைக்கும் பரிசு என்ன என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள் தாம் திண்ணமாக படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள்.

அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாக தங்கும் கவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனை குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும். (திருக்குர்ஆன் 98:7-8)

இறைவன் வகுத்த வழியில் வாழ்ந்து நன்மைகள் பெறுவோம். ஆமீன்.

வடகரை ஏ. முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை. 
Tags:    

Similar News