ஆன்மிகம்
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் பரிசளிப்பு விழா
வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் விழா ஜூன் 25ஆம் தேதி சனிக்கிழமையன்று அல் மம்ஜாரில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்கத்தில் நடைபெற்றது.
அமீரகத்தின் துணை ஜனாதிபதியும் பிரதமரும் மற்றும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற இருபதாவது துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டிக்கான விருதுகளும், சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான இந்த ஆண்டின் விருதும் மறைந்த `ஷேக் ரஷீத் பின் முகமது அல் மக்தூம்` அவர்களின் பெயரில் வழங்கப்பட்டது.
வெற்றியாளர்களுக்குப் பரிசளிக்கும் விழா ஜூன் 25ஆம் தேதி சனிக்கிழமையன்று அல் மம்ஜாரில் உள்ள கலாச்சார மற்றும் அறிவியல் சங்கத்தில் நடைபெற்றது.
முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறக்கட்டளை மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரான மாண்புமிகு ஷேக் அஹமது பின் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் இந்நிகழ்ச்சிக்குத் தலைமைத்தாங்கி பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
போட்டியாளர்களிலிருந்து மூன்று பேரின் ‘கிரா அத்'தோடு இந்நிகழ்ச்சி தொடங்கியது.
கலாச்சார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான துபாய் ஆட்சியாளரின் ஆலோசகரும் துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது விழாவின் தலைவருமான மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா இருபது வருடங்களாகத் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவின் பின்னணி பற்றியும், அதில் பங்கேற்றப் போட்டியாளர்கள் பற்றியும், வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்த முறைகள் பற்றியும் விளக்கியதோடு, நாட்டில் அமைதி பரவவும், பாதுகாப்பு நிலவவும் வந்திருந்த வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தப் போட்டியாளர்கள் பிரார்த்தித்ததையும் குறிப்பிட்டார்.
எழுபது முக்கியமான புத்தகங்களை எழுதியவரும், இருநூறுக்கும் மேலான தொண்டு திட்டங்களுக்குச் சேவை செய்தவருமான, 96 வயது நிரம்பிய அமீரக அறிஞர் மாண்புமிகு ஷேக் முஹம்மது அலி சுல்தான்–அல்-உலாமா அவர்களின் மனிதாபிமானத்தைப் பாராட்டும் வகையில் இந்த வருடத்திற்கான ‘சிறந்த இஸ்லாமிய ஆளுமைக்கான’ விருது வழங்கப்பட்டது.
பத்து நாட்களாக நடந்து முடிந்த திருக்குர்ஆன் மனனப்போட்டிக்கான முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது தேர்வான முதல் பத்து போட்டியாளர்களைப் பற்றி அறிவிக்கப்பட்டது.
துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனனப்போட்டியின் முதல் பரிசை தட்டிச்சென்றவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய துர்கி பின் முக்ரின் பின் அஹமது அல் அப்துல்முனிம். அதற்கு அடுத்த இடங்களை தாகெஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய பிலால் அப்துல்கலிக்கோவ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது நிரம்பிய அதீன் ஷஹ்ஸாத் ரஹ்மான் தட்டிச் சென்றனர்.
வெற்றியாளர்களுக்கு மாண்புமிகு ஷேக் அஹமது பின் முகமது பின் ராஷீத் அல் மக்தூம் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஊடகவியலாளர்களுக்கும், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாண்புமிகு இப்ராஹிம் முஹம்மது பூ மெல்ஹா நன்றி தெரிவித்து விழாவை நிறைவு செய்தார்.
- ஜெஸிலா பானு.