ஆன்மிகம்

மஸ்தான் சாஹிபு தர்காவில் கந்தூரி விழா

Published On 2016-05-18 11:25 IST   |   Update On 2016-05-18 11:25:00 IST
காரைக்கால் மஸ்தான் சாஹிபு தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாபு தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கந்தூரி விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை யொட்டி மாலை 4 மணியளவில் தர்காவில் இருந்து கந்தூரி கொடி ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தில் கண்ணாடி துண்டுகளால் அலங் கரிக்கப்பட்ட பெரிய ரதம், சிறிய ரதம், பல்லக்கு மற்றும் சாம்பிராணி வாகனம் உள்ளிட்ட அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த கொடி ஊர்வலமானது நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணியளவில் தர்காவை வந்தடைந்ததும், கொடிமரம் மற்றும் தர்காவின் மேல் உள்ள நான்கு மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வக்பு நிர்வாக சபையினர் செய்திருந்தனர். விழாவையொட்டி காரைக்கால்- தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Similar News