தோஷ பரிகாரங்கள்
null

கடன் பிரச்னையில் விடுபட... செவ்வாய் அன்று முருகன் வழிபாடு அவசியம்

Published On 2024-05-27 10:14 GMT   |   Update On 2024-05-28 11:00 GMT
  • அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும்.
  • செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.

நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது.

பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.

குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.

ஆனால் அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.

எனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.

Tags:    

Similar News